புடினின் எண்ணெய் கப்பல்கள் அனைத்தையும் கைப்பற்றுவோம்: பிரித்தானியா சூளுரை
ரஷ்யாவின் சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்ற பிரித்தானிய இராணுவம் தயாராகி வருவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவும் எண்ணெய் கடத்தும் கப்பல்களை இடைமறிக்க தீவிர இராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக ஜான் ஹீலி தி சன் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மரினேரா எண்ணெய் கப்பலைக் கைப்பற்ற அமெரிக்காவிற்கு உதவிய RAF-ன் பங்கைத் தொடர்ந்து, புடினின் சட்டவிரோதமான கப்பல்களை வெளியேற்றுவதில் பிரித்தானியா தனது பங்கை தீவிரப்படுத்தும் என்றார்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தங்களால் முடியும் என்றும், எஞ்சிய நாடுகளின் உதவியும் இதில் கோரப்படும் என ஹீலி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பின்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் எண்ணெய் கப்பல் தொடர்பில் அமெரிக்காவிற்கு உதவினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 பில்லியன் பவுண்டுகள்
மோசமான கப்பல்களை அகற்றுவதில் சட்டப்பூர்வமான மற்றும் மிகவும் பயனுள்ள நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவ நடவடிக்கைகள் தேவை என்றார். ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான பல நிறுவனங்கள் மீது தடை அமுலில் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக கப்பல்களை களமிறக்கி ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியா மட்டும் இதுபோன்ற கப்பல்கள் 500 எண்ணிக்கைக்கும் அதிகமாக தடை விதித்துள்ளது. இப்படியாக எண்ணெய் கப்பல்களால் கடந்த ஆண்டு மட்டும் விளாடிமிர் புடின் 100 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளார் என ஹீலி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள ஹீலி, ரேடாரில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் இந்த சட்டவிரோதக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் பிரித்தானியா தற்போது இன்னும் கடுமையான அணுகுமுறையை எடுக்க இருக்கிறது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |