மருத்துவ குணம் நிறைந்த கிராமத்து ஸ்டைல் செலவு ரசம்: எப்படி செய்வது?
கொங்குநாடு ஸ்பெஷலான இந்த செலவு ரசம் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
சளி, இருமலால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இந்த ரசத்தை செய்து கொடுத்தால் நிவாரணம் தரும்.
கிராமத்து ஸ்டைலில் மணக்க மணக்க செலவு ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரகம்- 4 ஸ்பூன்
- மிளகு- 2 ஸ்பூன்
- மல்லி தூள்- 6 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 8
- வரமிளகாய்- 6
- பூண்டு- 12
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும்.
பின் அதில் சீரகம், மிளகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து இதில் மல்லித்தூள், கருவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
இதை ஆறவைத்து மிக்ஸியில் ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடையை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் தட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
பின் இதில் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் மணக்க மணக்க செலவு ரசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |