கோலிக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படவிருக்கும் வீரர் யார்? கசிந்த முக்கிய தகவல்
கோலிக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வுக் குழு அறிவிக்க இருக்கும் வீரரின் விவரம் கசிந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து, விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
கோலிக்கு பதிலாக யார் இந்திய அணி கேப்டனாக அறிவிக்கப்படுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் 3 பேரில் ஒருவர் டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விரைவில் ரோகித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021-2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடியும் வரை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ரோகித் சர்மாவின் உடற்தகுதி அவர் கேப்டன் ஆவதற்கு பெரிய தடையாக இருந்ததாகவும், தனக்கு கிடைத்த இரண்டு மாத இடைவெளியில், அவர் 8 கிலோ எடையைக் குறைத்து, தனிப்பட்ட பயிற்சியாளர் உதவியுடன் மீண்டும் சிறப்பான உடற்தகுதியை பெற்றுள்ளராம்.
இரண்டு மாதங்களுக்கு பின், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித், 51 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.