ட்ரம்பின் ஆட்சி முடியும் வரையில் நாடு கடத்தப்பட்ட நபர்: வெளிவரும் விரிவானப் பின்னணி
Kilmar Abrego Garcia self-deports to Spain for remainder of Trump's term: ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை, கில்மார் அப்ரெகோ கார்சியா தானாகவே ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு முக்கிய அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், கில்மார் அப்ரெகோ கார்சியா என்பவர் அமெரிக்காவை விட்டு தாமாகவே வெளியேறியுள்ளார்.
சட்டப் போராட்டம்
மேரிலாந்து நபர் என்று அழைக்கப்படும் அப்ரிகோ கார்சியா, இவரை 1980களில் உருவான MS-13 குழுவைச் சேர்ந்தவர் என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. அத்துடன், 2025 மார்ச் மாதம் பால்டிமோரில் கைது செய்யப்பட்டு, எல் சால்வடார் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இது குறித்துப் பின்னர் கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர், இந்த நிகழ்வு ஒரு நிர்வாகத் தவறு என்று குறிப்பிட்டிருந்தார். அவரை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து அவர் பல மாதங்களாக சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது அவர் தாமாகவே ஸ்பெயினுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாக இருக்கலாம், ஆனாலும் நீதி நிலைநாட்டப்படும் என்றே அப்ரேகோ கார்சியா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில், அவர்கள் என்னவெல்லாம் சொல்ல முயன்றாலும், என் பாதையில் என்னென்ன தடைகளை ஏற்படுத்தினாலும், என்னை அவமானப்படுத்த எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், இந்த நிர்வாகத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டது; இது சாத்தியமென்று பலரும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றார்.

இதனிடையே, அவருடைய சட்டத்தரணிகளும் ட்ரம்ப் நிர்வாகமும் இந்த விலகலை ஒரு வெற்றியாகவே குறிப்பிட முயன்றுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை இரவு தெரிவிக்கையில்,
தற்காலிக வெளியேற்றம்
அவர் வெளியேற்ற உத்தரவின் ஒரு பகுதியாகத் தானாகவே ஸ்பெயினுக்குச் சென்றுவிட்டதாகவும், இதற்காக அவருக்கு எந்தவிதச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும், அவர் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் கூறியது.

ஆனால், அப்ரிகோ கார்சியாவின் மற்றொரு சட்டத்தரணியான சைமன் சாண்டோவல்-மோஷன்பெர்க், இதை ஒரு தற்காலிக வெளியேற்றம் என்று குறிப்பிட்டார்; மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் காலம் முடியும் வரை காத்திருக்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.