உலகில் பெட்ரோலை மலிவு விலையில் விற்கும் 10 நாடுகள்... யார் முதலிடம்?
பெட்ரோல் மற்றும் டீசல் வடிவில் எரிபொருள் அல்லது எண்ணெய், உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பெரும் தேவையாக உள்ளது.
மலிவான விலை
உண்மையில் உலகப் பொருளாதாரம் இயங்குவதே எரிபொருளில் என்பது பொருளாதார நிபுணர்களில் கருத்தாக உள்ளது. ஒரு நாட்டின் முழு பொருளாதாரமும் எண்ணெயை சார்ந்திருக்கிறது என்பது மிகையல்ல.

அவற்றின் விலைகளில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட பொருளாதாரத்தில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில உலக நாடுகள் மலிவான விலையில் பெட்ரோல் விற்பனையை முன்னெடுக்கிறது.
வெனிசுலா நாட்டில் பொதுமக்களுக்கு மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் மலிவான விலையில் பெட்ரோல் விற்கும் நாடும் இது தான். இங்கு ஒரு லிற்றர் பெட்ரோல் விலை 0.02 டொலர் முதல் 0.04 டொலர் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் பெட்ரோல் விலை லிற்றருக்கு 0.28 அமெரிக்க டொலர் அல்லது KWD 0.24 என வசூலிக்கின்றனர். அங்கோலாவில் லிற்றர் பெட்ரோலின் விலை 0.327 டொலர் அல்லது உள்ளூர் பண மதிப்பில் 400 அங்கோலா குவான்சா என விற்கப்படுகிறது.
அல்ஜீரியாவில் பெட்ரோல் விலை லிற்றருக்கு 0.33 அமெரிக்க டொலர் அல்லது உள்ளூர் பண மதிப்பில் 29.30 அல்ஜீரிய தினார் என நிர்ணயித்துள்ளனர்.
ஈரானில் மாதத்தில் முதல் 60 லிற்றர் பெட்ரோலுக்கு, லிற்றருக்கு 15,000 ஈரானிய ரியால் கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால், இந்த 60 லிற்றர் சலுகைக்கு மேல் லிற்றர் ஒன்றிற்கு 30,000 ரியால் வசூலிக்கின்றனர். அதாவது தோராயமாக லிற்றருக்கு 0.36 அமெரிக்க டொலர் வசூலிக்கின்றனர்.
நைஜீரியாவில் பெட்ரோல் விலை கணிசமாக வேறுபடுகிறது. அரசாங்கம் ஒரு லிற்றருக்கு 700 NGN அல்லது 0.48 டொலர் என விற்பனை செய்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் லிற்றருக்கு 900 முதல் 1000 NGN கட்டணமாக வசூலிக்கின்றனர்.
கத்தாரில் பெட்ரோல் விலை லிற்றருக்கு 0.55 அமெரிக்க டொலர் அல்லது உள்ளூர் பண மதிப்பில் 2.00 கத்தார் ரியால் என விற்பனையாகிறது.

சவுதி அரேபியாவில் கடந்த 2021 ஜூலை முதல் பெட்ரோல் விலை லிற்றருக்கு 0.58 அமெரிக்க டொலர் என்றே விற்பனையாகிறது. உள்ளூர் மதிப்பில் லிற்றருக்கு 2 சவுதி ரியால் வசூலிக்கப்படுகிறது.
மலேசியாவில் RON95 பெட்ரோல் விலை லிற்றருக்கு RM2.60 அல்லது 0.62 டொலர் எனவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தகுதியான மலேசிய குடிமக்கள் RON95 பெட்ரோலை லிற்றருக்கு RM1.99 எனவும் வாங்க முடியும்.
சூடானில் ஒரு லிற்றர் பெட்ரோலின் விலை, உள்ளூர் கட்டணத்தில் 630 SDG அதாவது 1.05 அமெரிக்க டொலர் என்று விற்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |