கொரியன் பொருட்களை விற்று கோடிகளில் லாபம்.., வணிகத்தை புரிந்து வெற்றிநடை போடும் நண்பர்கள்
இந்தியாவில் பரவும் கொரிய மோகத்தை புரிந்து கொண்டு கொரிய பொருட்களை விற்று கோடிக்கணக்கில் லாபம் பெரும் நண்பர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
UNI SEOUL
இந்தியாவில் சமீப காலமாக கொரிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை பயன்படுத்தி கொரிய வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு புதிய பிராண்டினை உருவாக்கி இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2023 -ம் ஆண்டில் கௌரவ் கர்மாணி மற்றும் மோஹித் குரானா என்ற இரண்டு நண்பர்களால் யுனி சியோல் (UNI SEOUL) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் புனேவை தலைமையிடமாக கொண்டது.
இந்த நிறுவனத்தில் கொரியன் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
Fashionதுறையில் கொரியன் பொருட்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை அறிந்த இந்த நண்பர்கள், கொரியன் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு Life style பிராண்டை உருவாக்க நினைத்தனர். அப்படி தான் இந்த நிறுவனம் உருவானது.
அதாவது, 2023 ம் ஆண்டில் ரூ.2 கோடி முதலீட்டில் இந்த நிறுவனத்தை தொடங்கினர். தற்போது, நிறுவனத்திற்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளன.
இங்கு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் , அழகு சாதன பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள், பொம்மை ,பைகள், பிற பேஷன் பொருட்கள் ஆகியவை உள்ளன.
இவை அனைத்தும் கொரியன் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இங்குள்ள பொருட்களுக்கு ரூ.99 முதல் 999 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொருட்களை ஒன்லைன் வாயிலாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களது முதல் கடையான யுனி சியோல் (UNI SEOUL) மாதத்திற்கு ரூ.25 லட்சம் ரூபாய் ஈட்டுகிறது.
இதேபோல மற்றொரு கடை ரூ.15 லட்சம் வருமானத்தை கொடுக்கிறது. அதேபோல இணையதளம் வழியாக 27 சதவீதம் வரை வருமானம் கிடைக்கிறது.
அந்தவகையில், 2024 -ம் நிதி ஆண்டில் கடைகள் மற்றும் இணையதள விற்பனை வாயிலாக ரூ.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவிக்கின்றனர்.
வருமானத்தை ரூ.300 கோடியாக மாற்ற வேண்டும் என்றும், கடைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த வேண்டும் என்றும் தனது லட்சியமாக கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |