ரூ.8352 கோடி நிறுவனத்தை விற்றுவிட்டு.. என்ன செய்யணும்னு தெரியவில்லை எனக்கூறும் இந்திய வம்சாவளி
ரூ.8352 கோடி நிறுவனத்தை விற்றுவிட்டு வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்வதாக இந்திய வம்சாவளி ஒருவர் கூறியுள்ளார்.
யார் அவர்?
கடந்த 2023 -ம் ஆண்டில் வினய் ஹிரேமத் (Vinay Hiremath) என்பவர் தனது நிறுவனத்தை விற்றதில் இருந்து வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்வதாக கூறியுள்ளார். இவர், அவர் ஒரு இந்திய வம்சாவளி தொழிலதிபர் மற்றும் லூமின் இணை நிறுவனர் ஆவார்.
லூம் (Loom) என்பது வீடியோ பகிர்வு தளமாகும். இது, தனது பயனர்களுக்கு குறுகிய கால வீடியோவை உருவாக்கவும் பகிரவும் உதவுகிறது.
இந்த லும் நிறுவனத்தை கடந்த 2015-ம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் ஜோ தாமஸ், ஷாஹத் கான் ஆகியோருடன் இணைந்து வினய் ஹிரேமத் தொடங்கினார்.
இந்நிலையில், ஹிரேமத் தனது நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டில் 975 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூ. 8352 கோடி) அவுஸ்திரேலிய மென்பொருள் நிறுவனமான அட்லாசியனுக்கு (Atlassian) விற்றார்.
இதையடுத்து அவர் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்வதாக கூறியுள்ளார். மேலும் அவர் தனது வலைப்பதிவில், "நான் பணக்காரன், என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இவர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு இனி வேலை செய்ய தேவையில்லை என்ற வாழ்க்கைக்கு வந்துவிட்டதாக கூறினார். மேலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு பிறந்த ஹிரேமத் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு தொழிலதிபர் ஆவார். இவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீதுள்ள ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கலிபோர்னியாவுக்கு செல்கிறார்.
அங்கு, பேக்ப்ளேன் (Backplane) என்னும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஷாஹத் கான் என்பவருடன் பழக்கம் ஏற்படுகிறது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் லும் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் லூமில் பணிபுரிந்த போது, நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றினார்.
தற்போது, இந்த நிறுவனம் 14 மில்லியன் பயனர்களுக்கும் 2 லட்சம் வணிகங்களுக்கும் சேவையை வழங்குகிறது.
மேலும், 33 வயதாகும் வினய் ஹிரேமத் இயற்பியல் மீதுள்ள ஆர்வத்தால் தற்போது ஹவாயில் இயற்பியல் படித்து வருகிறார்.
அதேபோல எலான் மஸ்க் போல தொழில் முனைவோராக இருக்க வேண்டும் என்றும், லும் நிறுவனத்தை போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |