104 ஆண்டுகளுக்கு முன் நடந்த செல்வந்தரின் திருமணம்.., சுவாரஸ்ய தகவல்கள் ஏராளம்
விருந்தினர்களுக்கு வெள்ளி தாம்பூலம், சிறப்பு ரயில்கள் மூலம் விருந்தினர்கள் என திருவிழா போல நடந்த திருமணத்தை பற்றி பார்க்கலாம்.
திருமணம்
பொதுவாக திருமணங்கள் என்றாலே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். தற்போதைய காலத்தில் சில திருமணங்கள் ஆடம்பரமாக நடத்தப்பட்டாலும், சில திருமணங்கள் ஒன்லைன் மூலமாகவும் நடக்கின்றன. ஆனால், மன்னர் கால திருமணங்கள் அனைத்தும் திருவிழா போல கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில், 1919 -ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானிரில் செல்வந்தர் ஒருவருக்கு திருவிழா மாதிரி திருமணம் நடைபெற்றது.
அப்போதைய காலத்தில், பிகானிரில் மிகப்பெரும் செல்வந்தராக சேத் சிரஞ்சிலால் கோத்தாரி என்பவர் இருந்து வந்தார். இவருக்கும் சேட் சூரஜ்மால் பன்சாலியின் மகளுக்கும் இடையே தான் திருமணம் நடைபெற்றது.
சிறப்பு ரயில் இயக்கம்
1919 -ம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணத்தில் 1,100 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பங்கேற்றவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் நடைபெற்ற இந்த திருமணம் திருவிழா போல நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், நாட்டில் 21 இடங்களில் இருந்து நடன குழுவினர் வரவழைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள், ஊரில் உள்ளவர்களுக்கு வெள்ளி தாம்பூலம் என வழங்கப்பட்டது.
அப்போதைய காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், இவர்களின் திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் என்று கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |