தனுஷ் அண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் 3வது அலையில் பிரபலங்கள் பலரும் சிக்கித்தவித்து வருகின்றனர்.
அத்துடன் ஓமைக்ரான் வைரசும் பரவி வருவதால் மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், இன்று(ஜன 23) எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022