அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை- செல்வராகவன் டுவிட்
அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை என்று இயக்குநர் செல்வராகவன் டுவிட் செய்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார்.
தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். இப்படத்தில்தான் நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு ‘காதல் கொண்டேன்’ படத்தில் மீண்டும் நடிகர் தனுஷை வைத்து இயக்கினார்.
இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 2ம் உலகம் உட்பட படங்களை இயற்றி உள்ளார்.
2006ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன், கருத்து வேறுபாடால் 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதன் பின்பு கிதாஞ்சலி ராமன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், இன்று இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.
அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை என்று பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.
— selvaraghavan (@selvaraghavan) April 26, 2023
அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை.