ஏர் கனடா நிறுவனத்துக்கு சுவிஸ் புலம்பெயர்தல் அமைப்பு அபராதம்
சுவிஸ் புலம்பெயர்தல் அமைப்பு, ஏர் கனடா விமான நிறுவனத்துக்கு பலமுறை அபராதம் விதித்துள்ளது.
ஏர் கனடா நிறுவனத்துக்கு அபராதம்
புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம், முறையான ஆவணங்கள் இல்லாத பயணிகளை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவந்ததற்காக ஏர் கனடா விமான நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பின்னர், உயிரை மாய்த்துக்கொள்ளும் அபாயத்திலிருக்கும் 14 பயணிகளை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவந்ததற்காக ஏர் கனடா விமான நிறுவனத்துக்கு 224,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களில் 9 பேருக்கு 144,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து ஏர் கனடா நிறுவனம் மேல் முறையீடு செய்தது.
ஆனால், அந்த வழக்கில் ஏர் கனடா நிறுவனம் தோற்றுவிட்டது. அந்நிறுவனம், தனது தரப்பு வாதத்தை உறுதி செய்வதற்கான ஆதாரத்தை வழங்க தவறிவிட்டதால், 144,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்த ஏர் கனடா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |