அரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டினார்! அடித்து துன்புறுத்தினார்: செம்பருத்தி சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்
செம்பருத்தில் சீரியல் பிரபலம் ஜெனிபர், உதவி இயக்குனர் தன்னை அரை நிர்வான வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமனாவர் தான் ஜெனிபர். இந்நிலையில், இவர் முதல் திருமணத்தை மறைத்து, உதவி இயக்குனரிடம் பழகி வருவதாக செய்தி வெளியானது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெனிபவர், முதல் கணவர் சரவணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்.
அதன் பின், சீரியலில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த நவீன் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.
நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் இருந்து அவர் 2.5 லட்சம் ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டார். அதன் பின் மீண்டும் 5 லட்சம் ரூபாய் வரை கடனாக வேண்டும் என்று கேட்டார். நான் அதற்கு என்னிடம் இல்லை என்று கூறினேன்.
இதனால், ஆத்திரமடைந்த அவர், தன்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து சென்னை முழுவதும் சுற்றி துன்புறுத்தினார்.
மேலும் 5 லட்ச ரூபாய் கடனாக தரவில்லை என்றால், இந்த அரை நிர்வாண வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், கடந்த 18-ஆம் திகதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற போது நவீன் குமார், தந்தை உதயகுமார், தம்பி பிரவீன் குமார் ஆகியோர் இணைந்து காரை வழி மறித்து தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு, தங்கையின் உடையை கிழித்து மானபங்கபடுத்தினர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போதும், நவீன் குமார் தந்தை உதயகுமார் காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிப்புரிவதால் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன் மீது பாலியல் தொழில் வழக்கு போட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.
பின்னர் தாக்கிய வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததால் ஆய்வாளர் சிட்டிபாபு உதயகுமாரை தவிர்த்து எளிதில் வெளிவரக்கூடிய வழக்குகளை பதிவு செய்து நவீன் குமார், பிரவீன் குமார்,கார்த்திக் ஆகியோரை சிறைக்கு அனுப்பி தற்போது பெயிலில் வெளிவந்துள்ளதாக கூறினார்.
மேலும் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்று தொடர்ந்து உதயகுமார், ஆய்வாளர் சிட்டிபாபு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது தங்கையை மானபங்கபடுத்திய உரிய வீடியோ ஆதாரங்களை வழங்கியும் ஆய்வாளர் சிட்டிபாபு பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக அமைச்சு பணியாளர் உதயகுமார், நவீன் குமார், பிரவீன் குமார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து,கொலை மிரட்ட விடும் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு மீது நடவடிக்கை வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக ஜெனிபர் கூறினார்.