தித்திக்கும் சுவையில் சேமியா பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சேமியா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி- 7
- பாதாம்- 7
- நெய்- 1 ஸ்பூன்
- சேமியா- ¼ கப்
- பால்- 1 லிட்டர்
- சர்க்கரை- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் முந்திரி மற்றும் பாதமை சுடுதண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனை தோலுரித்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அந்த நெய்யில் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் பால் சேர்த்து நன்கு கொதித்ததும் அதில் வறுத்த சேமியா மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறுதியாக இதில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால் சுவையான பால் பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |