ஒருவரை கொல்வதைப் போற்றுவது இழிவான உணர்வு! ஜே.டி.வான்ஸை கடுமையாக விளாசிய செனட்டர்
கார்டெல் உறுப்பினர்களை கொல்வது இராணுவத்தின் உயர்ந்த பயன்பாடு என்ற ஜே.டி.வான்ஸ் கூறியதற்கு செனட்டர் ரேண்ட் பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்
வெனிசுலாவில் இருந்து வெளிவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு கப்பலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் ட்ரென் டி அரகுவா போதைப்பொருள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, அவர்களை கொன்றதற்கு ஜே.டி.வான்ஸ் இராணுவத்தை பாராட்டினார்.
அவரது பதிவில், "நமது சக குடிமக்களுக்கு விஷம் கொடுக்கும் கார்டெல் உறுப்பினர்களைக் கொல்வது, நமது இராணுவத்தின் மிக உயர்ந்த மற்றும் சிறந்த பயன்பாடாகும்" என்று தெரிவித்தார்.
Killing cartel members who poison our fellow citizens is the highest and best use of our military.
— JD Vance (@JDVance) September 6, 2025
ரேண்ட் பால் விளாசல்
இந்த நிலையில் கென்டக்கி செனட்டர் ரேண்ட் பால் (Rand Paul) தனது எக்ஸ்தள பதிவில், "ஜே.டி.வான்ஸ் தான் குற்றம்சாட்டும் நபர்களைக் கொல்வது இராணுவத்தின் மிக உயர்ந்த மற்றும் சிறந்த பயன்பாடு என்று கூறுகிறார். அவர் To Kill a Mockingbird? புத்தகத்தை படித்திருக்கிறாரா?
விசாரணை அல்லது பிரதிநிதித்துவம் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக தூக்கிலிடப்பட்டால் என்ன நடக்கும் என்று அவர் எப்போதாவது யோசித்தாரா? விசாரணை இல்லாமல் ஒருவரைக் கொல்வதை மகிமைப்படுத்துவது எவ்வளவு இழிவான மற்றும் சிந்தனையற்ற உணர்வு" என கடுமையாக ஜே.டி.வான்ஸ் விளாசியுள்ளார்.
JD “I don’t give a shit” Vance says killing people he accuses of a crime is the “highest and best use of the military.”
— Rand Paul (@RandPaul) September 7, 2025
Did he ever read To Kill a Mockingbird?
Did he ever wonder what might happen if the accused were immediately executed without trial or representation??… https://t.co/VdnJbZkGfS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |