கமலா ஹாரிஸை அடுத்து அமெரிக்காவில் ஊடக கவனம் பெறும் உஷா சிலுக்குரி: யாரிவர்
துணை ஜனாதிபதி பொறுப்புக்கு டொனால்டு ட்ரம்பால் தெரிவு செய்யப்பட்ட செனட்டர் ஜே.டி.வான்ஸ் குறித்து ஊடகங்கள் விவாதிக்க, அவருடன் ஊடக கவனம் பெற்றுள்ளார் இன்னொருவர்.
செனட்டர் ஜே.டி.வான்ஸ்
அவர் செனட்டர் ஜே.டி.வான்ஸின் காதல் மனைவி உஷா சிலுக்குரி என்பவரே. முன்பு கடும் ட்ரம்ப் விமர்சகரான செனட்டர் ஜே.டி.வான்ஸ் தற்போது டொனால்டு ட்ரம்பால் துணை ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது மனைவி உஷா சிலுக்குரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவான், விவேக் மற்றும் மிராபெல் என மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான உஷா, யேல் சட்டக் கல்லூரியில் வைத்தே 2013ல் ஜே.டி.வான்ஸை சந்தித்துள்ளார்.
குழு விவாதம் ஒன்றில் இருவரும் ஒரே அணியில் கலந்து கொண்டுள்ள அதன் பின்னர் இருவரும் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்துள்ளனர். யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளார்.
ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதி
மட்டுமின்றி, Munger, Tolles, மற்றும் Olson ஆகிய நிறுவனங்களுக்கான சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கலிபோர்னியா, ஓஹியோ மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணியாக பணியாற்றும் உரிமம் பெற்றுள்ளார்.

2014ல் ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகளாக பிறந்த உஷா, இந்து முறைப்படியே தமது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் போட்டியிட்ட போது தமது துணை ஜனாதிபதி பொறுப்புக்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தெரிவான போது கிடைத்த அதே ஊடக வெளிச்சம் தற்போது செனட்டர் ஜே.டி.வான்ஸ் துணை ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் உஷாவுக்கும் கிடைத்து வருவதாக கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |