Whatsapp-ல் உங்களை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?
வாட்ஸ் அப்பில் உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒருவர் பேசும்போது அல்லது யாரேன்றே தெரியாத அந்நிய நபர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்யும்போது, நீங்கள் அதை கட்டுப்படுத்த முடியும். அதாவது, ஒருவரை பிளாக் செய்வதன் மூலமாக, அவர்கள் நமக்கு மெசேஜ் அனுப்புவதை தடுத்துக் கொள்வதற்கான வசதியை வாட்ஸ் அப் வழங்கியுள்ளது.
அதே சமயம், நம்மை பிளாக் செய்தவர்களுக்கு, சில டிரிக்ஸ் பயன்படுத்தி நாம் மெசேஜ் அனுப்ப முடியும்.
இதன்மூலம் எதிராளிக்கு மீண்டும் மெசேஜ் அனுப்ப முடியும். அப்போது உங்கள் பக்கம் தவறு இருந்தால், அதற்காக மன்னிப்பு கோரி, உங்களை அன்பிளாக் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.
பிளாக் செய்த பின்னும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனு சென்று, ‘டெலீட் அக்கவுண்ட்’ என கொடுத்து, உங்கள் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யவும்.
இப்போது, உங்கள் ஃபோனில் மீண்டும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, மீண்டும் அக்கவுண்ட் தொடங்கவும்.
ஆப் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்களை பிளாக் செய்த நபருக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும்.
ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலீட் செய்யும்போது, அனைத்து குரூப்புகளில் இருந்தும் நீங்கள் வெளியேறி விடுவீர்கள் என்பதை மறவாதீர்கள்