ரொனால்டோ, மெஸ்ஸி கூட செய்யாத சாதனை..வரலாறு படைத்த செனெகல் வீரர்
FIFA கால்பந்து உலகக் கிண்ணப் போட்டியில் செனெகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது.
செனெகல் வீரர்கள் அபாரம்
ஈராக், செனெகல் அணிகள் மோதிய போட்டி டொரோண்டோவில் நடந்தது. ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே ஹபீப் டையாரா கோல் அடித்து மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியில் செனெகல் வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். அதில் பாப் குயியே (Pape Gueye) மட்டும் இரண்டு கோல் அடித்தார்.
இறுதிவரை ஈராக் கோல் அடிக்காததால் செனெகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இலிமான் நதியாய்
இப்போட்டியில் செனெகல் அணியின் நடுக்கள வீரரான இலிமான் நதியாய் (Iliman Ndiaye), FIFA உலகக் கிண்ணப்போட்டியில் அபார சாதனை படைத்தார்.
அவர் மாற்று வீரராக களமிறங்கி ஒரு கோல் அடித்து, ஒரு கோலும் உதவியும், எதிரணியின் கோல் பகுதிக்குள் 5 முறை பந்தைத் தொட்டும், அதே எண்ணிக்கையில் பந்தை லாவகமாகக் கடத்தியும் சென்ற முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |