காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
விஜய் பங்கேற்ற விழாவிற்கு திருமாவளவன் செல்லக்கூடாது.., திமுக அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |