பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை பிரான்சின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி (Nicolas Sarkozy). நிக்கோலஸின் மனைவி, முன்னாள் மொடலும், பாடகி மற்றும் பாடலாசிரியருமான கார்லா புரூனி.
நேற்று, கார்லா மீது, வழக்கொன்றில், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் தவறு செய்தவர்களுடன் இணைந்து மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
என்ன வழக்கு?
2007ஆம் ஆண்டு, நிக்கோலஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, நிக்கோலஸுக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக, பிரெஞ்சு லெபனான் வர்த்தகரான Ziad Takieddine என்பவரும், கடாஃபியின் சில முன்னாள் அலுவலர்களும் சாட்சியமளித்திருந்தார்கள்.
ஆனால், 2020இல் திடீரென தன் சாட்சியத்தை மாற்றிவிட்டார் Ziad. அவர் தன் கணவர் நிக்கோலஸுக்கெதிராக சாட்சியமளிக்காமல் இருப்பதற்காக, Ziadக்கு நிக்கோலஸின் மனைவி கார்லா பணம் கொடுத்து அவரது வாயை அடைத்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில்தான் இப்போது கார்லா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸின் மனைவி கார்லா, 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |