Gpay, PhonePeவில் உங்கள் பணத்தை மாற்றி அனுப்பி விட்டீர்களா?
google pay, paytm, phone pay போன்ற செயலியை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக சுலபமாகவும், விரைவாகவும் பண பரிமாற்றங்களை செய்யலாம்.
தனது வங்கி கணக்குகள் மூலம் இணைக்கப்பட்டு இந்த செயலியை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளவும், பணத்தை அனுப்பவும் இது மிகுந்த பயனுள்ளதாக காணப்படுகிறது.
பணம் திருடு போவது, தொலைந்து போவதை தடுத்து இந்த செயலியை பயன்படுத்தி பணத்தை செலுத்துவதன் மூலம் பணம் பாதுகாப்பாகவும், சென்றடைகிறது.
இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இதிலும் சிலர் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்த பரிவார்த்தையில் சிலசமயம் ஏற்படும் தவறுகளால் பணம் வேறொருவரின் கணக்கிற்கு சென்றுவிடுகிறது. அவ்வாறு உங்கள் பணம் வேறொருவரின் கணக்கிற்கு தெரியாமல் மாற்றி அனுப்பிவிட்டால் இனி கவலை வேண்டாம்.
உடனடியாக 1800-120-1740 என்ற எண்ணுக்கு புகாரளியுங்கள். பின் வங்கிற்கு சென்று புகாரளியுங்கள், அவர்கள் கொடுக்கும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுங்கள்.
மேலும் bankingombudsman.rbi.org.in என்ற இணையத்தளம் மூலம் புகாரளிக்கலாம். இதனை பயன்படுத்தி உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |