சுவிஸில் வளர்ப்பு மகள் தொடர்பில் சிறைக்கு செல்லும் தந்தை
சுவிட்சர்லாந்தின் வாலைஸ் மாநிலத்தில் வளர்ப்பு மகளை பல ஆண்டுகளாக துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தைக்கு நிபந்தனை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வாலைஸ் மாநிலத்தின் Oberwallis மாவட்ட நீதிமன்றம் குறித்த தந்தைக்கு தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளது. மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவருக்கு 15,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சம்பவமானது 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது. தற்போது 27 வயதாகும் குறித்த இளம் பெண் 2006ல் போர்த்துகல் நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அப்போது அவரது தாயாரும் வளர்ப்பு தந்தையும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். மட்டுமின்றி வளர்ப்பு தந்தைக்கு அப்போது வேலை ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலும் குடியிருப்பிலேயே காணப்படும் அவர் சிறுமியின் முன்னிலையில் ஆபாச காட்சிகளை விரும்பி பார்த்தும் வந்துள்ளார். தொடர்ந்து தமது வளர்ப்பு மகளை வன்புணர்வுக்கு இரையாக்கவும் செய்துள்ளார்.
இந்த விவகாரம் 2019ல் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.