ஆற்று மணல் அள்ள அனுமதி! தடுத்தா அதிகாரிகள் இருக்கமாட்டாங்க: பரபரப்பை கிளப்பிய திமுக செந்தில் பாலாஜியின் தேர்தல் வாக்குறுதி
திமுக ஆட்சிக்கு வந்த 5 நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என பிரச்சாரத்தின் கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மாட்டு வண்டியில் மணல் அள்ள திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படும்.
11 மணிக்கு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றவுடன், 11:05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க, எந்த அதிகாரியும் தடுக்க மாட்டாங்க.
தடுத்தால் எனக்கு போன் பனுங்க, அந்த அதிகாரி இங்க இருக்கமாட்டாங்க என பிரச்சாரத்தில் போது செந்தில் பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக ஆட்சியில் நீங்க தைரியமாக மணல் திருடலாம் !
— STALIN RAJA N (@stalin_germany2) March 17, 2021
-ஐந்து கட்சி செந்தில் பாலாஜி பேச்சு pic.twitter.com/krHcI2MJU5
ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரத மறைவுக்கு பிறகு கட்சி பிளவு பட்டவுடன், டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். பின் அமமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.