செந்தில் பாலாஜி துறை யாருக்கு? கசிந்த முக்கிய தகவல்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனைக்கு சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவரது துறையை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டவுள்ளதாக தெரிகிறது.