ICUல் செந்தில் பாலாஜி! அடித்து துன்புறுத்தப்பட்டாரா? உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு தகவல்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அடித்து துன்புறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட முக்கிய இடங்களில் 20 மணிநேரத்துக்கும் அதிகமாக அமலாக்கத்துறையினர் சோதனையிட்டதில் நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது விசாரணைக்காக அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் நேரில் சந்திக்க சென்றனர்.
Chennai | Senthil Balaji is undergoing treatment. We will deal with it legally. We are not afraid of the threatening politics of the BJP-led central government: Tamil Nadu Minister Udhayanidhi Stalin https://t.co/o8C8Mca3RH pic.twitter.com/5ybLmiqsPH
— ANI (@ANI) June 13, 2023
அவசர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தும் சுயநினைவின்றி இருப்பதாகவும் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் காது அருகே வீக்கம் இருப்பதாகவும், இவ்வாறான பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது, பயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினும் செந்தில் பாலாஜி அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும், இந்த மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது எனவும் தெரிவித்துள்ளார்.
#WATCH | Tamil Nadu Electricity Minister V Senthil Balaji breaks down as ED officials took him into custody in connection with a money laundering case and brought him to Omandurar Government in Chennai for medical examination pic.twitter.com/aATSM9DQpu
— ANI (@ANI) June 13, 2023