அமலாக்கத்துறையிடம் விரைவில் சரணடையும் செந்தில் பாலாஜியின் தம்பி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் விரைவில் அமலாக்கத்துறையிடம் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அசோக் குமாரின் மீது புகார்
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
பின்னர், புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் சில காரணங்களை கூறி ஆஜராகாமல் இருந்தார்.
மேலும், அசோக் குமாரின் மனைவியின் பெயரில் கட்டப்பட்டு வந்த பெரிய பங்களா தொடர்பான நில மோசடி குறித்து விசாரிக்க அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவரும் ஆஜராகவில்லை.
பின்னர் அசோக் குமார் கைது செய்யப்பட்டார் என்று கூறிய நிலையில், அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்து, "அசோக் குமார் கைது செய்யப்படவில்லை எனவும், கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை" எனவும் கூறியது.
வழக்கறிஞர் கூறியது
இந்நிலையில், அசோக் குமார் விரைவில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னரே சரணடைவார் என்றும் கூறியுள்ளார்.
அசோக் குமாரின் விசாரணைக்கு பின்னர் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |