உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு
ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அளித்த உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பாக அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நடந்த நிலையில், கைது நடவடிக்கை செல்லும், கைது நடவடிக்கை சட்டவிரோதம் என நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர்.
இதனையடுத்து மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார், இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, நீதிபதி பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு உடன்படுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிகிச்சை நிறைவறைந்து காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |