செந்தில் பாலாஜி Health Update: ஐந்து நாட்களுக்கு பின் வெளியான அறிக்கை
இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் 20 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இயற்கையாக சுவாசிப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், திட உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும், நடைப்பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல்நிலை சீராக இருந்தாலும் இன்னும் 20 நாட்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் பார்ப்பதற்கு மருத்துவமனை அனுமதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |