தேடப்பட்டு வந்த செந்தில் பாலாஜியின் தம்பி நீதிமன்றத்தில் ஆஜர்
தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
பின்னர், புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |