விஜய்யின் அனைத்து வாகனங்களிலும் ஒரே எண் - பின்னணியில் உள்ள சென்டிமெண்ட்
தவெக தலைவர் விஜய், தனது அனைத்து வாகனத்திலும் ஒரே எண்ணை பயன்படுத்துவதன் பின்னணியில் சென்டிமெண்ட் உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இதற்காக பல்வேறு வசதிகள் உள்ளடக்கிய பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இன்று விமான நிலையத்தில் இருந்து திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள மரக்கடை பகுதிக்கு செல்கிறார்.
தொண்டர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது.
இந்நிலையில், விஜய் இந்த பிரச்சார வாகனம் தொடங்கி, தன்னிடம் உள்ள பிஎம்டபிள்யூ இவி, லெக்சஸ் எல் எம், டொயோட்டா உள்ளிட்ட அனைத்து வாகங்களுக்கு ஒரு நம்பர் பிளேட் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வாகன சென்டிமெண்ட்
அனைத்து வாகனங்களிலும் 0277 என்ற நம்பரையே பயன்படுத்தி வருகிறார்.
பிஎம்டபிள்யூ இவி காரில் TN 14 AH 0277 என்ற எண்ணையும், லெக்சஸ் எல் எம் காரில் TN 14 AL 0277 என்ற எண்ணையும், டொயோட்டாவில் TN 14 AM 0277 என்ற எண்ணையும் பயன்படுத்தி உள்ளார்.
அதேபோல், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சார வாகனத்திலும் TN 14 AS 0277 என்ற எண்ணையும் பயன்படுத்தி உள்ளார்.
இதன் பின்னணியில் அவரது தங்கை சென்டிமெண்ட் உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் தங்கை வித்யா சிறு வயதிலே இறந்து விட்டார்.
அவரது பிறந்தநாள் 14-02-1977 என்பதால், அவரின் நினைவாக தன்னுடைய அனைத்து வாகனங்களிலும் இந்த எண்ணை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |