இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தானை தரைமட்டமாக்கிய தமிழன்: 167 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 277 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பாபர் அஸாம் 42 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 269 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் டக்அவுட் ஆனார்.
அடுத்து அணித்தலைவர் ஷான் மசூத் 7 ஓட்டங்களில் வெளியேற, ஷாஃபிக் 41 ஓட்டங்கள் எடுத்தார். ஓரளவு ஓட்டங்கள் சேர்த்த பாபர் அஸாம் 42 ஓட்டங்களில் lbw ஆனார்.
செனுரன் முத்துசாமி மிரட்டல்
அணியின் ஸ்கோர் 150 ஆக இருந்தபோது சௌத் ஷகீலை 38 ஓட்டங்களில் செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழர் செனுரனின் மாயாஜால சூழலில் சிக்கிய பாகிஸ்தான் 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதாவது 17 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. செனுரன் முத்துசாமி 5 விக்கெட்டுகளும், ஹர்மர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் 167 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |