பாகிஸ்தானில் தவறி..இந்தியாவில் முதல் சதமடித்த தமிழர் செனுரன் முத்துசாமி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி சதம் விளாசினார்.
நெருக்கடி கொடுத்த செனுரன்
கவுகாத்தியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 450 ஓட்டங்களை கடந்துள்ளது. 
தமிழரான செனுரன் முத்துசாமி இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அவரது நங்கூர ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் உயர, இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
அவர் ஏழாவது வீரராக களமிறங்கி சதம் அடித்துள்ளார். இதற்கு முன் 2019ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் (Quinton de Kock) 7 அல்லது அதற்கு குறைந்த துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி சதம் அடித்த வீரராக இருந்தார்.
109 ஓட்டங்கள்
செனுரன் முத்துசாமி 206 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செனுரன் முத்துசாமிக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. அவர் 89 ஓட்டங்களில் களத்தில் இருந்தபோது ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் நாட்அவுட் ஆக நின்றார்.
பாகிஸ்தானில் தவறவிட்ட சதத்தை செனுரன் முத்துசாமி இந்தியாவில் அடித்து மிரட்டினார். இதுவரை 8 போட்டிகளில் செனுரன் முத்துசாமி 388 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |