சென்யார் புயல் உருவானது - தமிழகத்திற்கு பாதிப்பா?
சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்யார் புயல்
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மலாக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் அருகே காலை 5;30 மணியளவில் புயலாக உருவாகியுள்ளது.
இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த சென்யார்(Senyar) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்னர், படிப்படியாக பலவீனமடைந்து, இந்தோனிசியா அருகே கடற்கரையைக் கடக்கும்.
அதன் பிறகு, அது மேற்கு - தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி திரும்பும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு பாதிப்பா?
இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை 5.30 மணிக்கு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |