மொறுமொறு சேப்பங்கிழங்கு வறுவல்; வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
சேப்பங்கிழங்கு என்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதை சமைக்கும் போது சற்று தயிர் சேர்த்து சமைத்தால் சுவை அதிகமாகவே இருக்கும்.
அந்தவகையில் சேப்பங்கிழங்கு வைத்து எப்படி சுவையான வறுவல் 10 நிமிடத்தில் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- சீரக தூள் - 2 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- கடலை மாவு - 2 தேக்கரண்டி
- அரிசி மாவு - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- இடித்த பூண்டு
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்க்கவும்.
2. பின்பு சேப்பங்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
3. பிறகு நன்கு ஆறவிட்டு தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
4. பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பின்பு சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவும்.
7. பின்பு இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
8. அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |