செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை
அமெரிக்காவை நடுநடுங்கவைத்த செப்டம்பர் 11 தாக்குதல்களை எளிதில் மறக்க இயலாது.
இந்நிலையில், அந்த தாக்குதல்களில் உயிர் தப்பிய சிலரது இன்றைய நிலை குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் 11 தாக்குதல்கள்...
2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நிகழ்த்திய விடயம் பெரும்பாலானோர் அறிந்ததே.
நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பெண்டகன் ஆகிய இடங்கள் மீது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று விமானங்கள் மோதிய நிலையில், நான்காவது விமானம் பெனிசில்வேனியாவிலுள்ள நிலப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஒரு முக்கிய விடயம் என்னென்றால், அந்த விமானத்திலிருந்த பயணிகள் தீவிரவாதிகளை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் ஒரு தீவிரவாதியைக் கொன்றதாகவும் கருதப்படுகிறது. ஆக, அரசு கட்டிடம் ஒன்றின்மீது மோத திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காமல், அந்த விமானம் நிலம் ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை
செப்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் தப்பிய பலர் இன்னமும் அந்த அதிர்ச்சியின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை.
Jocelyn Brooks என்னும் பெண், இரட்டைக் கோபுரங்களில் ஒன்றிலிருந்த நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டிடம் தாக்கப்பட்டு உடைந்து விழுவதைக் கவனித்துள்ளார். 40 படிகளில் வேகவேகமாக இறங்கி அந்த கட்டிடத்திலிருந்து உயிரைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார் அவர்.
தானும் இறந்துவிடுவேன் என்றே எண்ணினாராம். ஆனால், அந்த பயங்கர சம்பவத்தில் அவர் உயிர் தப்பியதைத் தொடர்ந்து, ஒரு செவிலியராகி இன்னமும் மக்கள் தொண்டாற்றிவருகிறார்.
Janice Brooks என்னும் பெண், இரட்டைக் கோபுரங்களில் ஒன்றின்மீது ஒரு விமானம் மோதியபோது அடுத்த கட்டிடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
உயிர் தப்பி ஓடும்போதே பலரையும் காப்பாற்றி படிகளில் இறங்கி ஓடியிருக்கிறார்கள் Janiceம் அவருடன் வந்த சிலரும்.
இன்றும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடவில்லையென்றாலும், அந்த பயங்கர சம்பவம் குறித்து பேச அழைக்கப்படும் இடங்களில் எல்லாம் சென்று அது குறித்து பேசிவருகிறார் Janice.
இந்நிலையில், கடத்தப்பட்ட நான்கு விமானங்களுக்கு அடுத்தபடியாக, கடத்தப்பட இருந்த ஐந்தாவது விமானத்திலிருந்த அதன் விமானியும் சக விமானியான ஒரு பெண்ணும் தாங்கள் உயிர் பிழைத்தது அற்புதம்தான் என்கிறார்கள்.
அவர்கள் விமானம் புறப்பட இருந்த நிலையில், ஏற்கனவே இரட்டைக் கோபுர தாக்குதல் நிகழ்ந்துவிட, சந்தேகத்துக்குரிய சிலர் விமானத்திலிருப்பதை கவனித்த விமானியான Tom Mannelloவும், அவரது சக விமானியான Carol Timmonsம் அவர்களை தாக்குவதற்காக தயாராகியுள்ளார்கள்.
ஆனால், மற்ற விமானங்கள் கடத்தப்பட்ட தகவல் வெளியானதும், JFK விமான நிலையத்திலிருந்த அனைத்து விமானங்களிலிருந்த அனைவரும் விமானங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிறகு, தனது விமானத்திலிருந்த சந்தேகத்துக்குரிய நபர்கள் என்ன ஆனார்கள் என அதிகாரிகளை விசாரித்தாராம் Tom. ஆனால், அது ரகசியம் என்பதால் அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை என்கிறார் Tom.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |