உலக புகழ்பெற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் அதிர்ச்சி தோல்வி!
பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அமெரிக்க சாம்பியன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவியுள்ளார்.
பாரீசில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான உலக புகழ்பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தான் இளம் வீராங்கனை Elena Rybakinaவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
இந்த தோல்வியின் மூலம் அவர் தொடரை விட்டு வெளியேறினார்.
ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ், 6-க்கு 4, 6-க்கு 1, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ், சிலி வீரர் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.