கோடிக்கணக்கான பணத்தை வேறு இடத்திற்கு.,உலகின் 4வது பணக்காரர் எடுத்த முடிவு
அமெரிக்காவில் பணக்காரர் ஒருவர் வரி காரணமாக சிலிக்கான் வாலேயை விட்டு வெளியேறினார்.
248.2 பில்லியன் டொலர்கள்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, உலகின் நான்காவது பணக்காரராக இருப்பவர் செர்ஜி பிரின் (Sergey Brin).
Image: Getty Images
52 வயதாகும் இவர் கூகிளின் இணை நிறுவனராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 248.2 பில்லியன் டொலர்கள் ஆகும்.
சிலிக்கான் வாலே ஜாம்பவான் என்றும் அறியப்படும் செர்ஜி பிரின், கலிபோர்னியாவை விட்டு வெளியேறி தனது பணத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார்.
கலிபோர்னியாவை விட்டு வெளியேற்றம்
கலிபோர்னியா மாகாணத்தின் மிகப்பெரிய செல்வந்தர்கள் தங்கள் பணத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில் செர்ஜி பிரின் அவர்களுடன் இணைந்துள்ளார்.
இதற்கு காரணமாக பெரும் பணக்காரர்கள் மீது முன்மொழியப்பட்ட வரி என்று கூறப்படுகிறது.
Image: Getty Images
செர்ஜி பிரின், கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாட்களில் தனது வணிகங்களின் கணிசமான பகுதியை வெளியே மாற்றியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸின்படி, செர்ஜி பிரினின் வணிக நலன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான கலிபோர்னியாவைச் சேர்ந்த 15 வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களும் இதில் அடங்கும்.
Image: Kelly Sullivan/Getty Images
Image: Bloomberg
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |