நீ நல்லா இரு மா.. காதலால் எனக்கு இந்த கதி! பிரபல நடிகரின் வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ராகவேந்திரன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் எனும் தொடரின் முதல் சீசனில், புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ராகவேந்திரன்.
நகைச்சுவையான அந்த கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் அவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ராகவேந்திரன் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், தனக்கு சரிவர ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் கூறி அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
குறித்த வீடியோவில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டிருக்கும் ராகவேந்திரன், அதில் ஒரே ஒரு ஒருதலைக்காதல்.. மொத்த உடலும் மோசமாகி விட்டது என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரே ஒரு வாழ்க்கை.. என்ன கொடுமை டா இது.. நல்ல இரு மா...மன அழுத்தத்தால் மொத்த உடலும் மோசமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொடர்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்த ராகவேந்திரன், பகுதிநேர வேலையாக தண்ணீர் போத்தல் விநியோகம் செய்யும் வேலையை செய்து வருவதாக அறிவித்திருந்தார்.