தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு பிரபல சின்னத்திரை நடிகர் உருக்கமான பேச்சு
சென்னை பாண்டிபஜார் தியாகராய சாலையில் உள்ள ரெயின்போ ஆர்கேட் என்ற வணிக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சின்னத்திரை நடிகரான ஸ்ரீ சிக்கி இருந்தாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த தீ விபத்து இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் “2வது தளத்தில் உள்ள வழிபாட்டுக் கூடத்தில் நான் உட்பட பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் இருந்தோம். 12 மணியளவில் அந்த அறையில் புகை நுழைந்தது. அடுத்த 3 நிமிடங்களில் அறை முழுக்க புகை நிறைந்தது.
வெளியில் வந்து பார்த்தபோது கீழே வர முடியாத அளவுக்கு புகை இருந்தது.
எனவே மொட்டை மாடிக்கு அனைவரும் சென்று விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தியதால் புகை குறைந்தது. பின்னர் எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்" எனக் அவர் உருக்கமாக கூறினார்.
மேலும் இசம்பவம் குறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா, எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு 12 மணியளவில் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். சேத விபரங்கள் இனிமேல்தான் தெரியவரும். மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. 2வது தளத்தில் இருந்தவர்களை எங்கள் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை" எனக் கூறியுள்ளார்.