மாரிமுத்து சார் கடைசிநாள் கூட சிரிச்சி பேசிட்டு இருந்தார்.. ஆனா Freezerல அவர பார்த்தப்போ.. கண்கலங்கியபடி பேசிய நடிகை
நடிகர் மாரிமுத்து இறப்பு நம்ப முடியாத ஒன்றாக இருந்தது என்று உடன் நடித்த சீரியல் நடிகை மதுமிதா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் சோகம்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுடன் இணைந்து நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் மீள துயரத்தில் உள்ளனர்.
தொடரின் நாயகியான மதுமிதா நடிகர் மாரிமுத்து உடன் பணியாற்றியது குறித்தும், அவரது குணம் குறித்தும் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
மனமுடைந்த நடிகை மதுமிதா
மாரிமுத்து குறித்து அவர் பேசியபோது, 'எப்போவுமே செட்-க்கு சந்தோஷமா தான் வருவாரு. மது மா எப்படி இருக்க? சாப்பிட்டியா, வெளியே எங்கேயாவது போனியானு அக்கறையா கேப்பாரு. ரொம்ப ஜாலியா இருப்பாரு ஷூட்டிங் செட் ல. எங்களுக்கு எப்படா வீட்டுக்கு போலாம்னு இருக்கும். ஆனா அவரு மட்டும் எனெர்ஜிடிக் ஆக இருப்பாரு.
அவரோட கேரக்டர ரொம்ப சரியா பண்ணுவாரு. முதல்ல அவரு கூட சண்டை போட்டேன். அதன் பின்னர் அவரு வந்து சேர்ந்து வொர்க் பண்ணப்போறோம் எதையும் மனசுல வெச்சுக்காதனு சொன்னாரு.
இந்த விடயம் கேள்விப்பட்டபோ ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். கார்ல போகும் போது கூட நம்பல, ஆனா அவர பிரீஸர் பாக்ஸ்ல பாத்தப்போ மைண்ட் பிளாக் ஆகிடுச்சு. அவரு இருக்கும்போது கலகலன்னு இருந்த செட், இப்போ நிசப்தமாக ஆகிடுச்சு.
கடைசி நாள் கூட சிரிச்சிட்டே பேசிட்டு இருந்தாரு இப்போ வரும்போது கூட இங்கதான சிரிச்சு பேசிட்டு இருந்தாரு. அய்யோன்னு இருக்கு எனக்கு' என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |