அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்று கொண்ட நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்
பிரபல சீரியல் நடிகை ரேவதி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்று கொண்டுள்ளார்.
இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த தாமோதரனுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுவாக சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி அதை வைரலாக்கும் நிலையில் எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை நடிகை ரேவதி பெற்றெடுத்துள்ளார்.