பிரபல தமிழ் சின்னத்திரை நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்தது! மாப்பிள்ளை யார்? வெளியான அழகிய வீடியோ
பிரபல சீரியல் நடிகை சஹானாவுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
கண்ணான கண்ணே, தாலாட்டு ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் சஹானா,பகல் நிலவு, அழகு ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் அபிஷேக் என்ற மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோவில் திருமண சடங்குகள், வழக்கமாக திருமணத்துக்கு பிறகு மணமக்கள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முடிந்த பிறகு அபிஷேக் சஹானாவிற்கு முத்தமிடுவது அழகான தருணமாக அமைந்துள்ளது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் சஹானா - அபிஷேக் வீடியோ வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமணத்தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.