இலங்கை தமிழரை மணந்த சின்னத்திரை நடிகை சரண்யா கொரோனா காலத்தில் செய்து வரும் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு
பிரபல சீரியல் நடிகை சரண்யா கொரோனா ஊரடங்கில் உணவு இல்லாமல் தவிப்பர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருவது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் சரண்யா. இவர் இலங்கை தமிழரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த வருடம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகும் அவர் நடிக்க தொடங்கவில்லை. வயதான பெற்றோர் பாதுகாப்பிற்காக வீட்டிலேயே இருந்து அவர் ஒரு புத்தகம் எழுதி வந்தார். ஆனால்
இந்த வருடம் களத்தில் இறங்கி அவர் உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறார். பிளாட்பாரத்தில் வாழ்பவர்கள் மட்டுமின்றி கொரோனா நோயாளிகள், வயதானவர்கள் என பலரும் உணவில்லாமல் தவிப்பதாக கூறும் அவர், ஒரு பெண் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா அதனால் உணவு வழங்க முடியுமா என கேட்டார்.
அதற்கு பிறகு தான் Shore Women Society என்ற ஒன்றை தொடங்கி மக்களுக்கு உணவளிக்க தொடங்கி இருப்பதாக கூறுகிறார் சரண்யா. தினம்தோறும் ஐம்பது பேருக்கும் மேல் அவர் உணவளித்து வருகிறார்.
இது தொடர்பான அவரின் சமூகவலைதள பதிவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.
இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது.
பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது. நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள்.
அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.