திருமணமாகி ஒரு வருடத்தில்! பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்
நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியாவின் கணவர் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார்.
திருமுருகன் இயக்கத்தில் வெளியான நாதஸ்வரம் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஸ்ருதி ஷண்முக பிரியா.
இதனை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக தன்னுடைய காதலரான அரவிந்த் சேகர் என்பவரை கரம்பிடித்தார்.
பாடி பில்டரான அரவிந்த் சேகர்- ஸ்ருதி தம்பதியினர் தங்களது திருமண வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, அடிக்கடி வீடியோ- புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அரவிந்த சேகர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அரவிந்த் சேகர், ஜேபி கிங்ஸ் கிளாசிக் 2022 போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |