உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., அதிர்ச்சி பேட்டியளித்த தமிழ் நடிகை!
'அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.
எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் , தன்னிடம் அத்து மீறினார்கள் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறியுள்ளார்.
அந்தப்பேட்டியில் 2006ம் ஆண்டு ஒரு சீரியலுக்காக கோயில் யானையுடன் எடுத்த ஷூட்டில் யானை தாக்கி எனக்கு 7 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த நான் இறந்து விட்டேன் என்றே அங்கிருந்தவர்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் என்னை டான்ஸர்கள் தூக்கிச் செல்லும்போது அதில் ஒரு டான்ஸர், என் மார்பில் கை வைத்து அத்து மீறினார்.
அந்த சமயத்தில் நான் ஒரு பிணம்போல இருந்தேன், பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.
என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |