கணவனை விவாகரத்து செய்யும் பாவம் கணேசன் சீரியல் நடிகை! சொன்ன அதிர்ச்சி தரும் காரணம்
பிரபல சீரியல் நடிகையான விலாசினி தன்னுடைய திருமண வாழ்க்கையை பொறுத்தவரை ஏமாந்து போய்விட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பாவச கணேசன் சீரியலில் முக்கிய கேரக்டரில் விலாசினி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில், திருமண வாழ்வைப் பொறுத்தவரை தான் ஏமாந்துவிட்டதாகவும் தனது கணவர் சபரி ஞானபிரகாஷ் தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்தினருக்கும் தொல்லை தருவதாக கூறியுள்ளார்.
திருமணத்திற்க்கு முன்புவரை அவர் இவ்வளவு மோசமானவர் என்று தனக்கு தெரியவில்லை. திருமணத்திற்குப் பின்னர் தான் அவருடைய உண்மைகளை ஒவ்வொன்றாக தெரியவந்தது.
அவர் பல பேருடன் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்.அது மட்டுமின்றி பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன்.
என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை விட்டு விலகுவது மட்டுமே என்னுடைய வாழ்க்கைக்கு நல்லது என்று முடிவு செய்திருப்பதாக சற்று வேதனையுடன் கூறியுள்ளார்.