இதனால் தான் அவரை விவாகரத்து செஞ்சேன்! இப்போ தான் நிம்மதியா இருக்கு... திருமண உறவு பற்றி மனம் திறந்த பாவம் கணேசன் சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகை விலாசினி தனக்கு விவாகரத்து ஆன விடயம் தொடர்பாக மனம் திறந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை விலாசினி. இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்தக்கார பெண்ணான இவருக்கு திருமண உறவு சரியாக அமையவில்லை.
சபரி ஞானபிரகாசம் என்பவருடன் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இளையராஜா உள்பட பல பிரபலங்கள் இணைந்து நடத்திய இவரது திருமண வாழ்க்கை இப்படியொரு நிலைமைக்கு வந்து நிற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சபரி ஞானபிரகாசம் பல மோசடி செயல்களில் ஈடுபடும் நபர் என்பது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வது தான் தனக்கு தற்போது நிம்மதியை அளிக்கிறது என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் விலாசினி.
சாதாரண குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது நண்பர்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.