தங்கை இறந்த 48 மணிநேரத்தில் அக்காவும் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம்
இந்தி சின்னத்திரை சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டோலி சோஹி
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை டோலி சோஹி. 48 வயதான இவர் 2000ஆம் ஆண்டில் இருந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
Jhanak சீசன் 1யில் நடித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் அந்நோயுடன் போராடிய டோலி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அமந்தீப் சோஹி
அதேபோல் அவரது சகோதரியும், நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை நோயுடன் போராடி வந்ததால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி அமந்தீப் சோஹி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனையடுத்து அடுத்த 48 மணிநேரத்தில் அவரது சகோதரி டோலி சோஹியும் உயிரிழந்தார். இது சின்னத்திரையுலகை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |