31 பெண்களை துஷ்பிரயோகம் செய்த கொடூரன்! அடையாளம் காணப்பட்டபோது காத்திருந்த அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளில் 31 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபர் மரணத்திற்கு பிறகு கண்டறியப்பட்டார்.
15 ஆண்டுகளில் 31 பெண்கள் வன்புணர்வு
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த கீத் சிம்ஸ் (66) என்ற நபர் பல்வேறு பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
கடந்த 1986 முதல் 2001ஆம் ஆண்டு வரையில், சுமார் 31 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இதற்கு காரணமான கீத் சிம்ஸ் என்பவர் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் 14 - 55 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் குற்றவாளி குறித்து கூறிய அடையாளங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையானது 2016ஆம் ஆண்டில் ஒரு திருப்புமுனைக்கு வந்தது. அப்போது குற்றங்கள் நிகழ்ந்த இடங்களில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டாலும், சிம்ஸ் தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்த தாமதமானது.
பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சிம்ஸ் தான் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதமே கீத் சிம்ஸ் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் சிம்ஸ் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதை அறிந்து வேலையை விட்டுவிட்டார். அதன் பின்னர் வீட்டில் இருந்தே டயாலிஸில் செய்து வந்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் சாப்பிடுவது, சுவாசிப்பதில் சிம்சிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நிமோனியா கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு பொருத்தப்பட்ட புதிய சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால், அவர் கடந்த பிப்ரவரி உயிரிழந்துள்ளார்.
கீத் சிம்சிற்கு மூன்று பிள்ளைகள், ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தினருக்கு அவர் அன்பானவராகவே இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.