சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி தொடர்பில் வெளியான மிக முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 1,500கும் அதிகமானோர் மிக தீவிரமான பக்கவிளைவுகளால் அவதிக்கு உட்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜூலை 23 வரையான காலகட்டத்தில் 4,319 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,537 பேர்களுக்கு மிக தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பக்கவிளைவுகளில் குறிப்பாக மயக்கம், முகம் ஸ்தம்பித்து போதல் அல்லது ஒவ்வாமை உள்ளிட்டவை ஆபத்தானதாக கருதப்படுகிறது.
பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும், மிக தீவிரமாக பாதிக்கப்பட்ட 1,537 பேர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதில் குறிப்பிட்ட சிலருக்கு ஆயுள் காலம் அதன் தாக்கம் இருக்கும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இதுவரை 128 பேர்கள் நோயின் தீவிரம் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
மொத்தம் 1.5 மில்லியன் பைஸர் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 0.04% பேர்களுக்கே பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, மாடர்னா தடுப்பூசி 3 மில்லியன் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் 0.025% பேர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 128 சுவிஸ் மக்கள் மரணமடைந்த நிலையில், மரண காரணம் தடுப்பூசி தான் என்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.