எலும்பு தேய்மானம் பிரச்சினை தீர எள்ளு உருண்டை: செய்வது எப்படி?
கருப்பு எள்ளில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கருப்பு எள்ளை சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கலாம். உடலில் உள்ள் கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்யும்.
இரத்தக் குழாய்களும், இதயமும் ஆரோக்கியமாக செயல்பட கருப்பு எள் உதவி செய்கின்றன. எள்ளில் ஒரு கைப்பிடி எள்ளில் ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து அடங்கியுள்ளது.
தேவையான பொருட்கள்
எள்ளு – 1 கப்
வேர்க்கடலை – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எள்ளைப் போட்டு நன்றாக பொரியும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், வேர்க்கடலை பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸியில் ஆற வைத்துள்ள எள்ளு, வேர்க்கடலையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, அந்த கலவையுடன் அரை கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள கலவையை கையில் லேசாக நெய் விட்டு சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான எள்ளு உருண்டை ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |